உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் கேட் வால்வு தொட்டியில் ஆண் உடல்: போலீஸ் விசாரணை

குடிநீர் கேட் வால்வு தொட்டியில் ஆண் உடல்: போலீஸ் விசாரணை

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டையில் குடிநீர் கேட் வால்வு தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் வீராசாமி, 62; டைலர். நேற்று காலை பஸ் நிலையம் அருகே, கெங்கையம்மன் கோவில் எதிரில் இருக்கும் தெருக்களுக்கு குடிநீர் வழங்கும் கேட் வால்வு தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.தகவல் அறிந்த மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை