மேலும் செய்திகள்
அய்யனார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
21-Oct-2025
ராஜராஜேஸ்வரி கோவிலில் மண்டல பூஜை நிறைவு
18-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் அபிராமி உடனுறை அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா முடிந்து 48 நாட்கள் நடக்கும் மண்டலாபிஷேக பூர்த்தி நடந்தது. கிராம மக்கள் சார்பில் கடந்த 2007ம் ஆண்டு, அபிராமி அம்பிகை உடனுறை அமிர்த கண்டேஸ்வரர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் துவங்கியது. அதன்பின் 18 ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் 4ம் தேதி நடந்தது. அதன்பின் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா துவங்கி நடத்தப்பட்டது. மண்டலாபிேஷக பூர்த்தி விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
21-Oct-2025
18-Oct-2025