கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை சராசரியாக 17.35 மி.மீ., மழை பதிவானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில், மி.மீ., அளவில் கள்ளக்குறிச்சி 2, தியாகதுருகம் 32, விருகாவூர் 20, கச்சிராயபாளையம் 11.5, கோமுகி அணை 3, மூரார்பாளையம் 2, வடசிறுவள்ளூர் 2, கடுவனுார் 4, மூங்கில்துறைப்பட்டு 9, அரியலுார் 7, சூளாங்குறிச்சி 4, ரிஷிவந்தியம் 17, கீழ்பாடி 5, கலையநல்லுார் 5, மணலுார்பேட்டை15, மணிமுக்தா அணை 3, வாணாபுரம் 6, மாடாம்பூண்டி 19, திருக்கோவிலுார் வடக்கு 20, திருப்பாலப்பந்தல் 12, வேங்கூர் 20, பிள்ளையார்குப்பம் 33, எறையூர் 69, உ.கீரனுார் 96 என மாவட்டம் முழுவதும் 416.50 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 17.35 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக உ.கீரனுாரில் 96 மி.மீ., மழை பதிவாகியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். கோமுகி அணையின் மொத்த கொள்ளளவான 46 அடியில் 43 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. தொடர் நீர்வரத்து இருந்ததால் அணையில் இருந்து ஷட்டர்கள் வழியாக ஆற்றில் விநாடிக்கு 120 கன அடி தண்ணீரும், பாசன மதகு வழியாக விநாடிக்கு 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. அதேபோல், சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவான 36 அடியில், 22 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து ஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.