| ADDED : டிச 03, 2025 06:25 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரிமா சங்கம் சார்பில் அரகண்டநல்லுாரில் இலவசம் மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம் நடந்தது. திருக்கோவிலுார் நகர அரிமா சங்கம், டவுன் அரிமா சங்கம் மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி சார்பில் அரகண்டநல்லுார் லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம் நடந்தது. அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ராஜாசுப்பிரமணியம் முகாமை துவக்கி வைத்தார். பரணி, மாவட்ட செயலாளர் மதிவாணன், இணை செயலாளர் பால்ஆரோக்கியராஜ், மாவட்ட பொருளாளர் ராமகிருஷ் ண ரமணன், மாவட்ட தலைவர் உஷாராணி முன்னிலை வகித்தனர். மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி சிறப்பு மருத்துவ குழுவி னர் மருத்துவ பயனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். வட்டார தலைவர் வில்வபதி, சங்கத் தலைவர்கள் சூரியகலா, பாலமுருகன், செயலாளர்கள் மஞ்சுளா, பன்னீர்செல்வம், பொருளாளர்கள் லீலா, செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.