பள்ளி மாணவர்களுக்கான குறு மைய விளையாட்டு போட்டிகள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 5 இடங்களில், குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு குறு மைய விளையாட்டு போட்டிகள் கடந்த 15ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில், கள்ளக்குறிச்சி குறு மைய விளையாட்டு போட்டிகள் மூரார்பாளையம் அரசு பள்ளியிலும், சங்கராபுரம் குறு மைய போட்டி அரசம்பட்டு அரசு பள்ளி, திருக்கோவிலுார் குறு மைய போட்டி கபிலர் அர சு ஆண்கள் பள்ளி, உளுந்துார்பேட்டை குறு மைய போட்டி எறையூர் செயின்ட் ஜோசப் பள்ளி, சின்னசேலம் குறு மைய போட்டி நைனார்பாளைம் அரசு பள்ளியில் நடக்கிறது. கபடி, வாலிபால், கால்பந்து, ஹாக்கி, வலைபந்து, கைப்பந்து, பேட்மிட்டன், கேரம், பீச் வாலிபால், சிலம்பம் மற்றும் தடகள போட்டிகள் நடக்கிறது. சி.இ.ஓ., கார்த்திகா வழிகாட்டுதலின் படி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில் பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த கால்பந்து போட்டியினை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நண்பர்கள் கால்பந்தாட்ட குழு தலைவர் மணிவண்ணன், செயலாளர் அன்புதமிழன், உடற்கல்வி இயக்குனர்கள் செந்தமிழ்செல்வன், ராதாகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்தன், லோகநாதன், பாலு, பாலமுருகன், ராஜா, தினகரன், நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.