உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகத்தில் நலத்திட்ட உதவி 4,000 பேருக்கு அமைச்சர் வழங்கல்

தியாகதுருகத்தில் நலத்திட்ட உதவி 4,000 பேருக்கு அமைச்சர் வழங்கல்

தியாகதுருகம்: தியாகதுருகத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.பஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் ஷர்வன்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன்கள் தாமோதரன், அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் வரவேற்றார்.கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 4000 பயனாளிகளுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வேலு வழங்கினார்.ஆர்.டி.ஓ.,கிருஷ்ணன், தாசில்தார் பிரபாகரன், பி.டி.ஓ.க்கள்., துரைமுருகன், செந்தில் முருகன், செயல் அலுவலர் மேகநாதன், மாவட்ட துணைச் சேர்மன் தங்கம், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி.ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், அண்ணாதுரை, நகர செயலாளர்கள் சுப்புராயலு, மலையரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், துணைச் செயலாளர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி பெருமாள்.இளைஞரணி நிர்வாகி மணி, சாமிதுரை, கணேசன், அப்துல் கபூர், சிவக்குமார், பிரதீப்குமார், சிலம்பரசன், அஜீத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ