சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சாலையோர பள்ளத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் தேசிய நெடுஞ்சாலையில், மாடூர் டோல்கேட் அருகே சாலையோரம் உள்ள பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் சாலையோரம் மண் குவியல்கள் உள்ளது. கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும் போது, பள்ளங்கள் மற்றும் மண் குவியலால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மாடூர் டோல்கேட் அருகே சாலையோரம் உள்ள பள்ளங்களை சரிசெய்து, விபத்தை தடுக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.