| ADDED : டிச 26, 2025 05:02 AM
கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தினர். போராட்ட குழுவினரிடம் தமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, , 7 நாட்களாக போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தொடர்ந்து 6 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 1,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாவும், புதிய காலி பணியிடங்களை உருவாக்குவதாகவும் அமைச்சர் சுப்ரமணியன் நேற்று முன்தினம் உறுதியளித்தார். இதனால், எம்.ஆர்.வி., செவிலியர்களின் போராட்டம் நேற்று முன்தினம் மாலை வாபஸ் பெறப்பட்டது.