உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறுகிய குளத்து மேட்டுத் தெரு

குறுகிய குளத்து மேட்டுத் தெரு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தாறுமாறான வாகன நிறுத்தம், ஆக்கிரமிப்பால் குறுகி போன குளத்துமேட்டு தெருவில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் ஒட்டியவாறு குளத்து மேட்டு தெரு உள்ளது. குறுகலான இந்த தெருவில் வணிக நிறுவனங்கள் அதிகம் இருப்பதால், இங்கு வரும் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை அந்தந்த கடைகளுக்கு முன்பாக நிறுத்தி விடுகின்றனர். இதனால், சாலை முழுதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. அத்துடன் சாலையோர ஆக்கிரமிப்புகளும் பெருகி வருகிறது. ஏற்கனவே குறுகலான சாலை, ஆக்கிரமிப்பு, வாகனங்கள் நிறுத்தத்தால் மேலும் குறுகி சந்துபோல மாறிவிட்டது. இதனால், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும், அவ்வழியாக செல்லும் குடியிருப்புவாசிகள், வாகன நெரிசலில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, குளத்துமேட்டு தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்த நகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை