மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி
30-Jul-2025
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தேசிய பேரிடர் மீட்பு படை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி அளித்தனர். புயல், வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி, நிலச்சரிவு, ரசாயன கசிவு தாக்குதல் போன்ற பேரிடர் குறித்து விளக்கப்பட்டதுடன், பேரிடர் காலத்தில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் காயமடைந்தவர்களை மீட்பது, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துதல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில், தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், சங்கராபுரம் தீயணைப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
30-Jul-2025