உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கள்ளக்குறிச்சியில் தேசிய நுாலக வார நிறைவு விழா

 கள்ளக்குறிச்சியில் தேசிய நுாலக வார நிறைவு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 58 வது தேசிய நுாலக வார நிறைவு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலக ஆணைக் குழு சார்பில் 58 வது தேசிய நுாலக வார விழாவின் நிறைவு நாள் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மைய நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நுாலக வாசகர் வட்ட குழு தலைவர் டாக்டர் உதயகுமார் தலைமை தாங்கினார். கல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் மதிவாணன், கால்நடை முதுநிலை மேற்பார்வையாளர் முனியாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்ட மைய நுாலகர் காசிம் வரவேற்றார். மாவட்டத்தில் உள்ள கிளை நுாலகர்கள் அனைவரும் பங்கேற்றனர். கடந்த 24ம் தேதி துவங்கப்பட்ட நுாலக வார விழாவில் நுாலகத்தினை பயன்படுத்துவதனால் சமூகத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விரைவில் மாவட்ட நுாலகம் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. நேற்று நடந்த நிறைவுநாள் விழாவில் அரசின் நல்நுாலகர் பட்டம் பெற்ற எடுத்தவாய்நத்தம் நுாலகர் தர்மலிங்கம் பாராட்டப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை