இருப்பை காட்ட அவசியமில்லை : குமரகுரு பேச்சு
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொகுதியில், கடந்த லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்களை அ.தி.மு.க., பெற்றுள்ளதால், இருப்பை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என, மாவட்ட செயலாளர் குமரகுரு பேசினார்.பகண்டை கூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில அவர் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக தரமற்ற முறையில் திட்ட பணிகள் நடக்கின்றன.கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மாவட்டத்தில் தேசிய ஊரக வாய்ப்பு திட்டத்தில் வெட்டப்படும் கிணறுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. கடுவனுாரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சாய்ந்து விட்டது. பி.டி.ஓ., அலுவலகத்திற்கு முன்புறம் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் பயப்படுகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு குமரகுரு பேசினார்.