உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  5வது நாளாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

 5வது நாளாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவனையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் 5வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க நிர்வாகி பவானி தலைமை தாங்கினார். செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18ம் தேதியில் இருந்து சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி., செவிலியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனை கண்டித்தும், எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று 5வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி