மேலும் செய்திகள்
பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
20-Nov-2024
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் கொளஞ்சிவேல், செந்தில் முருகன், டாக்டர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கல்பனா வரவேற்றார்.ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மூலம் கண்டறியப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாத குழந்தைகளின் தாய்மார்கள் 139 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேற்பார்வையாளர் எழிலரசி நன்றி கூறினார்.
20-Nov-2024