உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அங்கீகாரம் இன்றி இயங்கிய துவக்க பள்ளி; உளுந்துார்பேட்டையில் அதிகாரிகள் அதிர்ச்சி

 அங்கீகாரம் இன்றி இயங்கிய துவக்க பள்ளி; உளுந்துார்பேட்டையில் அதிகாரிகள் அதிர்ச்சி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ப்ளே ஸ்கூல் அங்கீகாரத்துடன், துவக்க பள்ளி நடத்தி வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. உளுந்துார்பேட்டை அடுத்த தேன்குணம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளி ப்ளே ஸ்கூல் அங்கீகாரம் பெற்று, 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடந்து வருவதாகவும், பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இப்பள்ளியில் பயின்று 2 மற்றும் 3ம் வகுப்பில் இருந்து வெளியேறி மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருந்தது. இது குறித்து புகாரின்பேரில் வட்டார வள மைய அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர். அப்போது ப்ளே ஸ்கூல் அங்கீகாரத்தை வைத்து துவக்கப் பள்ளி நடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, இப்பள்ளி மாணவர்களை அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்