மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தல் டிரைவர் தப்பியோட்டம்
12-Aug-2025
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் கிராவல் மண் திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு ரோந்து சென்றனர். அந்த வழியாக வந்த டி.என்.88.கே.1879 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 2 யூனிட் கிராவல் மண் இருந்தது. விசாரணையில் டிப்பர் லாரியை ஓட்டி வந்தவர் பூண்டி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் பிரேம்நாத், 35; அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து பிரேம்நாத்தை போலீசார் கைது செய்தனர்.
12-Aug-2025