உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேவபாண்டலத்தில் பாட்டிசை பட்டி மன்றம்

தேவபாண்டலத்தில் பாட்டிசை பட்டி மன்றம்

சங்கராபுரம், தேவபாண்டலத்தில் பாட்டிசை பட்டி மன்றம் நடந்தது.சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் பாண்டுவனேஸ்வரர் கோவில் மகா கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு, பாண்டுவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ஓய்வூதியர் சங்க செயலாளர் மதியழகன், மணி முன்னிலை வகித்தனர்.அழகு பன்னீர்செல்வம் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்தினார். திரை இசையில் பக்தியும் பண்பாடும் சிறக்க பாடியவர்கள் வாழ்ந்த கவிஞர்களா, வாழும் கவிஞர்களா தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.திரை இசையில் பக்தியும் பண்பாடும் சிறக்க பாடியவர்கள் வாழ்ந்த கவிஞர்களே என்று நடுவர் தீர்ப்பளித்தார். பட்டி மன்ற நிகழ்ச்சியில் திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை