உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மனு

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற மனு

கள்ளக்குறிச்சி: கரடிசித்துாரில் நீர் பாசன வாய்க்கால் மற்றும் மயான ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.கரடிசித்துார் விவசாயிகள் அளித்துள்ள மனு:கரடிசித்துார் ஏரியில் 1ம் எண் கொண்ட மதகை தனி நபர் ஒருவர் அடைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மதகு திறக்கப்படாமல் இருப்பதால், ஏரி தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், கரடிசித்துார் கிராம விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வாய்க்கால், ஆக்கிரமிப்பில் உள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கில் நீடித்து வருகிறது.அதேபோல், சமத்துவ மயானமும் ஆக்கிரமிப்பில் இருப்பதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் சிரமமாக உள்ளது. எனவே, வாய்கால் மற்றும் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடைக்கப்பட்ட ஏரி மதகைத் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை