மேலும் செய்திகள்
இந்த வழி வருவதென்றால் மனசில் 'திக்... திக்'
08-Sep-2025
கள்ளக்குறிச்சி; வடகீரனுார் பகுதி மக்கள் மயானம் வேண்டி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; பகண்டை கூட்ரோடு அடுத்த வடகீரனுார் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் இன மக்கள் யாராவது இறந்தால், பல ஆண்டுகளாக முஸ்குந்தா ஆற்றின் கரையோரம் உடலை புதைத்து அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடும் வெள்ளப் பெருக்கின் போது புதைக்கப்படும் சடலங்கள் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. குறுகிய இடத்தில் உடலை அடக்கம் செய்வதற்கு சிரமமாக உள்ளது. மயானம் வேண்டி பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பட்டாதாரர்கள் இடத்தை கையகப்படுத்தி ஒகிக்கி தர வேண்டும். இவ்வாறு அம்மனுவில் உள்ளது.
08-Sep-2025