உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் மயில்சாமி, 21; இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியது. கடந்த மார்ச் மாதம் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, மயில்சாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் மயில்சாமி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை