உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உரக்கழிவு கட்டடம் கட்ட எதிர்ப்பு; போலீஸ் குவிப்பால் பரபரப்பு

உரக்கழிவு கட்டடம் கட்ட எதிர்ப்பு; போலீஸ் குவிப்பால் பரபரப்பு

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், அம்பேத்கர் நகர் பகுதியில் உரக்கழிவு கட்டடம் கட்டும் பணிக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை, அம்பேத்கர் நகர் பகுதியில், திடக் கழிவு மேலாண்மை செயல் திட்டத்தின் கீழ், நகராட்சி சார்பில் உரக்கழிவு கட்டடம் கட்டுவதற்கான பணி துவங்கியது. குடியிருப்புகள் மிகுந்த இப்பகுதியில் உரக்கழிவு திட்டம் செயல்படுத்தப்பட்டால், துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் குடியிருப்போருக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, அத் திட்டத்தை கைவிடுமாறு அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் சில மாதங்களுக்கு முன் பணியை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக போராட்டக்காரர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நேற்று மீண்டும் கட்டுமானப் பணியை தொடர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையறிந்த அம்பேத்கர் நகர் குடியிருப்போர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஷாகுல்ஹமீது, 55; சம்பந்தப்பட்ட இடம் தங்களுக்கு சொந்தமானது என நீதிமன்ற தீர்ப்பை காண்பித்து உரிமை கோரியதால் பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இது பற்றி ஆய்வு செய்ய நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் போலீசார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதனால் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள இருந்த கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை