மேலும் செய்திகள்
ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது
25-May-2025
கள்ளக்குறிச்சி, : வரஞ்சரம் அருகே காணாமல் போன பெண் மற்றும் அவரது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் அருள்மணி, 38; இவரது மனைவி கலைமணி,32; இந்த தம்பதிக்கு, 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். அருள்மணி கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். மனைவி மற்றும் மகன்கள் எஸ்.ஒகையூரில் வசிக்கின்றனர். இந்நிலையில் கலைமணி கடந்த 4ம் தேதி, தனது இளையமகன் கவினை,4; அழைத்து கொண்டு, அவரது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அருள்மணி அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
25-May-2025