உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் போலீஸ் பற்றாக்குறை; குற்றச்செயல்கள் அதிகரிப்பு

சங்கராபுரத்தில் போலீஸ் பற்றாக்குறை; குற்றச்செயல்கள் அதிகரிப்பு

சங்கராபுரம்; சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்கராபுரத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இந்த ஸ்டேஷனில் 40 கான்ஸ்டபிள்கள் மட்டுமே பணி செய்கின்றனர். இதில் பலர் நீதிமன்ற பணி, ரோந்து, சம்மன் வழங்கல், குற்றச்செயலில் ஈடுபடுவோரை பிடிக்கும் தனிப்படை, கலால் என பல்வேறு பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர். சிலர் மெடிக்கல் விடுமுறையில் செல்கின்றனர். இதனால் ஸ்டேஷன் பணியில் 20 பேர் மட்டுமே உள்ளனர். பணியில் உள்ள சொற்ப அளவிலான போலீசாரும், கட்சி பொதுக்கூட்டம், தலைவர்கள் வருகை, கோவில் திருவிழா பாதுகாப்பிற்கு சென்றுவிட்டால், போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தர் (ரைட்டர்) தவிர யாரும் இருப்பதில்லை. சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. சங்கராபுரம் பகுதியில் மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால், தகராறு, விபத்து, திருட்டு ஆகியவை நடைபெறும்போது சம்பவ இடத்திற்கு போலீசார் அனுப்பு வதில் சிக்கல் ஏற்படுகிறது. பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் அப்போதைய மக்கள் தொகை கணக்கின்படி நியமிக்கப்பட்ட போலீசாரே இன்று வரை தொடர்கிறது. ஆட்கள் பற்றாக்குறையால் சங்கராபுரம் பகுதியில் கடந்த பல மாதங்களாக நடந்து வரும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே, சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட எஸ்.பி., நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை