மேலும் செய்திகள்
சிவாலயங்களில் பிரதோஷ விழா
21-Aug-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வர் கோவில், சின்னசேலம் கங்காதீஸ்வரர், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் மற்றும் பஞ்சாட்சரநாதர் கோவிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
21-Aug-2025