உழவர் சந்தையில் மஞ்சப் பை வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் மஞ்சப் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் அன்னை தெரசா உலக கருணை தினத்தை முன்னிட்டு ஸ்டைல் டான்ஸ் அகாடமி மற்றும் பி.என்.ஐ., இணையும் கைகள் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி 6 ஆயிரம் மஞ்சப் பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உழவர் சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு மஞ்சப் பை வழங்கப்பட்டது. நடன இயக்குனர் அருண், பாண்டி, பி.என்.ஐ., நிர்வாகி ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.