பி.டி.ஓ.,க்கள் மாற்றம்
கள்ளக்குறிச்சி: மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், வட்டார வளர்ச்சி அலுவலர் அலகில் பணிபுரியும், 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சியில் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்த சங்கரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல, கள்ளக்குறிச்சியில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்த சந்திரசேகரன், அதே அலுவலகத்தில் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த முருகன், கள்ளக்குறிச்சி கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், மாற்றம் செய்யப்பட்டனர்.மேலும், சின்னசேலத்தில் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்த ரங்கராஜன், திருநாவலுார் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரிந்த சுமதி, சின்னசேலம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், திருநாவலுாரில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்த செல்வபோதகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பி.டி.ஓ.,வாகவும் மாற்றம் செய்யப்பட்டனர். இந்த அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.