உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அரசம்பட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

 அரசம்பட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

சங்கராபுரம்: அரசம்பட்டு கிராமத்தில் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதியடைந்தனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமம் 4 வது வார்டு பகுதியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு சங்கராபுரம் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் 4 வது வார்டு பகுதியில் மழைநீர், சாலையில் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்தது. இதில் வீட்டிலிருந்து அனைத்து சாமான்கள் மழை நீரில் நனைந்து தேசமடைந்தன. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீர் செய்ய கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் வாய்க்கால் சரியாக இல்லாததால், மழைநீர் வழிந்தோட வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். சங்கராபுரம் அரசம்பட்டு கிராமம் 4வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ