மேலும் செய்திகள்
ரேஷன் கார்டு குறை கேட்பு சிறப்பு முகாம்
12-Oct-2025
ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு குறை கேட்பு சிறப்பு முகாம் இன்று 8ம் தேதி நடக்கிறது. வாணாபுரம் மற்றும் சங்கராபுரம் தாலுகா அலுவலகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; வாணாபுரம் மற்றும் சங்கராபுரம் தாலுகா அலுவலகங்களில், பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைகேட்பு சிறப்பு முகாம் இன்று 8ம் தேதி நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில், மின்னணு ரேஷன் கார்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்க்கை, பெயர் நீக்கம், மொபைல் எண் இணைத்தல், குடும்ப தலைவர் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று, ரேஷன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12-Oct-2025