மேலும் செய்திகள்
பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
29-Jul-2025
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி நடந்தது. பயிற்சி தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலையில், தினமும் மதியம் 1:00 மணியிலிருந்து 1:20 வரை மாணவர்களுக்கு வாசிப்பு திறனை வலுப்படுத்த பயிற்சி அளித்து வருகின்றனர். பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பறை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகரித்து வருவதாக தலைமை ஆசிரியர் கூறினார்.
29-Jul-2025