உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் அருளப்பன் வரவேற்றார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 8வது ஊதிய குழுவில் ஓய்வூதியர்களின் ஊதிய உயர்வை பரிசீலிக்க மறுக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட அமைப்பாளர் பத்மநாபன், சுப்ரமணியன், ஜெயவர்மா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி