உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம்

ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம் பகண்டை கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகந்நாதன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., தினகர்பாபு வரவேற்றார். உதவியாளர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் விபரங்கள் உட்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கணக்காளர் முத்துசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சீர்பாதநல்லுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை