உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கச்சிராயபாளையத்தில் ஆற்றுத் திருவிழா உற்சவம்

கச்சிராயபாளையத்தில் ஆற்றுத் திருவிழா உற்சவம்

கச்சிராயபாளையம் -கச்சிராயபாளையத்தில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கச்சிராயபாளையத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் கோமுகி ஆற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த திருவிழாவில் கச்சிராயபாளையம் மற்றும் வடக்கனந்தல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள், அகிலாண்டேஸ்வரி உடனுறை உமா மகேஸ்வரர், கச்சிராயபாளையம் பாலமுருகன் சுவாமிகள் ஊர்வலமாக கோமுகி ஆற்றிற்கு கொண்டு வரப்பட்டது.பின், ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஆற்றங்கரையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆற்றுத் திருவிழாவிற்கு வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை