உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து சாலை மறியல்

குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சிஅடுத்த தென்தொரசலுாரில் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்தொரசலுார் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சில மாதங்களாக காலனி பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த தென்தொரசலுார் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே காலி குடங்களுடன் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பி.டி.ஓ.,க்கள் மோகன்குமார், சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் 3:45 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை