உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

சங்கராபுரம்- சங்கராபுரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு காலனி பகுதியில் கடந்த 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்ததால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து நேற்று காலை 10:00 மணியளவில் சங்கராபுரம் சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.அதன் பேரில் 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை