உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ரூ. 2 லட்சம் மொபைல் போன் திருட்டு

 ரூ. 2 லட்சம் மொபைல் போன் திருட்டு

உளுந்துார்பேட்டை: திருநாவலூர் அருகே கடையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மொபைல் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த பரவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகள் ஜனனி, 27;இவர் மடப்பட்டில் மொபைல் போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று கடையை திறக்க வந்த போது, கடையின் பின்பக்க ஷீட் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 மொபைல் போன்கள் , ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ஜனனி கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை