மேலும் செய்திகள்
சிகிச்சை பலனின்றி பெண் பலி
11-Apr-2025
விபத்தில் கூலி தொழிலாளி பலி
18-Apr-2025
சின்னசேலம்; சின்னசேலத்தில் முதியவரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; இவர் நேற்று காலை 9:30 மணிக்குசின்னசேலம் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் உதவி கேட்டார். அந்த நபர் ரூ.20 ஆயிரத்தை ராஜேந்திரன் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து அவரிடம் கொடுத்தார். பின், அவருடைய ஏ.டி.எம்., கார்டை திருப்பி தராமல், அதற்கு பதிலாக, வேறொரு கார்டை அவரிடம் கொடுத்தார். தொடர்ந்து அந்த நபர், அருகில் இருந்த மற்றொரு ஏ.டி.எம் மையம் சென்றார். அங்கு ராஜேந்திரன் கார்டை பயன்படுத்தி அவரது, வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மாயமானார். இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
11-Apr-2025
18-Apr-2025