உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆற்றில் அடித்துச் சென்ற மின் ஊழியரை தேடும் பணி; ஆர்.டி.ஓ., பார்வை

ஆற்றில் அடித்துச் சென்ற மின் ஊழியரை தேடும் பணி; ஆர்.டி.ஓ., பார்வை

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக மின் ஊழியரை கண்டுபிடிக்கும் பணியை ஆர்.டி.ஓ, பார்வையிட்டார்.தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள உடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் போது தற்காலிக மின் ஊழியர் திலீப்குமார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.அவரை தேடும் பணியில் சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் ரப்பர் போர்ட் மூலம் மூன்றாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆர்.டி.ஓ., லுார்துசாமி தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் மீட்பு வீரர்களிடம் விபரம் கேட்டறிந்து விரைந்து தேடம்படி அறிவுறுத்தினார். தாசில்தார் பாலகுரு, மண்டல துணை தாசில்தார் பாலசுப்ரமணியன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், வி.ஏ.ஓ., முருகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை