ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கொளஞ்சிவேலு பங்கேற்று, சங்க கொடியினை ஏற்றினார். மாவட்ட செயலாளர் தயாபரன் செயல் அறிக்கையும், வீரபத்திரன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர்.கூட்டத்தில், முதுநிலை பட்டியல் வரிசையில் உள்ள பி.டி.ஓ.,க்களுக்கு தணிக்கை, ஊராட்சி, நிர்வாகம் மற்றும் சத்துணவு நிலையில் பணி மாறுதல் வழங்க வேண்டும். காலம் கடந்த ஆய்வு கூட்டங்களை தவிர்க்க வேண்டும், அலுவலக வேலை நாட்களில் மட்டுமே ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. இதில், மாவட்ட நிர்வாகிகள் முத்துசாமி, குமரவேல், பிரபாகரன், செல்வி, விண்ணரசி, ஜெயப்பிரகாஷ், குமரன், மணி, திருமணிகண்டன், வட்டார தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டார செயலாளர் தினகர்பாபு நன்றி கூறினார்.