மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
24-Oct-2024
ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோடு காவல் நிலையத்தில் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை, சரித்தர குற்றவாளிகளின் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.மேலும், புகார் அளிக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் பிரச்னைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடம் நட்புடன் பழக வேண்டும். காவல் நிலைய வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு உடனிருந்தனர்.
24-Oct-2024