கருத்தரங்கம்
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் இயக்கம் சார்பில், கணிதம் சார்ந்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மும்மூர்த்தி, திருமால், சுபாஷ், ரெக்சி முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கவிதா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கருத்தாளர் ஜானகிராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கணித சிறப்புகள் குறித்து பேசினார். ஆசிரியர் அருண் நன்றி கூறினார்.