உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமியிடம் சீண்டல்; போக்சோ சட்டத்தில் கைது 

சிறுமியிடம் சீண்டல்; போக்சோ சட்டத்தில் கைது 

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய் தனர். கள்ளக்குறிச்சி அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40; இவர், அருகாமையில் உள்ள கிராமத்திற்கு டீ குடிக்க செல்வது வழக்கம். அப்போது, டீ கடை பெண் உரிமையாளருக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 23ம் தேதி டீ கடை உரிமையாளரின் வீட்டிற்கு சென்ற மணிகண்டன், அங்கிருந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை