உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு வெகுவிமரிசையாக நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில், ரவிகுருக்கள் முன்னிலையில் பிரதோஷ நாயகருக்கு பால், தயிர்,இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மகாதீபாராதனைகளுக்குப்பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சங்கராபுரம் சங்கரலிங்கேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், மூக்கனுார், மஞ்சப்புத்துார் சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ