மேலும் செய்திகள்
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
12-Mar-2025
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே பஸ்ஸில், புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் செல்லும் தனியார் பஸ்ஸில், மூதாட்டி ஒருவர் மது பாட்டில்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று காலை தேவனூர், கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பஸ்ஸில், சந்தேகத்திற்குரிய வகையில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர், வைத்திருந்த பையை பரிசோதித்தனர். அப்போது அவர் புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், போலீஸ் நிலையத்திற்கு மூதாட்டியை அழைத்து சென்றனர். விசாரணையில் அவர், செஞ்சியை அடுத்த மலையரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யசோதை, 80; என தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.
12-Mar-2025