உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

கச்சிராயபாளையம் : அக்கராயபாளையம் பகுதியில் மது போதையில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேல், 57; இவரது மகன் ஆசைமணி, 31; மது போதைக்கு அடிமையான ஆசைமணி அடிக்கடி குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் மது போதையில், அவரது தந்தை ஆனந்தவேலுவை கடுமையாக தாக்கினார். புகாரின்பேரில், கச்சிராயபாளைம் போலீசார் வழக்குப் பதிந்து ஆசைமணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை