மேலும் செய்திகள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டம்
19-May-2025
கள்ளக்குறிச்சி : சிறுவங்கூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது பேரவை கூட்டத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் சுகந்தலதா, கள அலுவலர் லட்சுமி முன்னிலை வகித்தனர். செயலாட்சியர் சாந்தி வரவேற்றார். டாக்டர் சுரேந்தர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களை பரிசோதித்தனர். செயலாளர் பூமாலை உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, காய்ச்சல், தலைவலி, சளி உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.சிறுவங்கூர், தண்டலை, பெருவங்கூர் மற்றும் ரோடுமாமந்துார் கிராமங்களை சேர்ந்த 350 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.தொடர்ந்து, அரசு மருத்துவமனை வளாகத்தில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டுறவு பண்டக சாலை துவக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் பவானி மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
19-May-2025