உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சங்கராபுரம்; சங்கராபுரம் பேரூராட்சி சார்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட 2ம் கட்ட முகாம் தாகப்பிள்ளை திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் கீதா தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, செயல் அலுவலர் சங்கர், துணைத் தலைவர் ஆஷாபீ முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற் றார். மகளிர் உரிமை, பட்டா மாற்றம், மின் இணைப்பு உள்ளிட்ட 800 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 3 நபர்களுக்கு, மின் இணைப்புக்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது. முகாமில் தாசில்தார் வைரக்கண்ணன், துணை தாசில்தார் பாண்டியன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் திருமலைவாசன், அட்மா குழு தலைவர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை