உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரூ. 1.17 கோடி மதிப்பில் தார்சாலை பணி துவக்கம்

ரூ. 1.17 கோடி மதிப்பில் தார்சாலை பணி துவக்கம்

சின்னசேலம், : மரவானத்தம் கிராமத்தில் ரூ. 1.17 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. சின்னசேலம் அடுத்த மரவானத்தம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மூலதன முதலீடு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ 1.17 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. உதயசூரியன் எம்.எல். ஏ., தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை சேர்மன் அன்புமணிமாறன், பி.டி.ஓ., சவுரிராஜன், ஊராட்சி துணை தலைவர் தனம்பாலகிருஷ்ணன், துணை பி.டி.ஓ., ரேகா, ஊராட்சி தலைவர் தென்னரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை