டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை(11 தேதி) டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு மற்றும் தனியார் பார்கள் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறினால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுபானம் விற்பனை செய்யும் பார்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்வதுடன், உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.