உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாகனம் மோதி டெய்லர் பலி

வாகனம் மோதி டெய்லர் பலி

திருக்கோவிலுார் : பைக்கில் சென்ற டெய்லர், வாகனம் மோதி இறந்தார்.மணலுார்பேட்டை அடுத்த பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 42; டெய்லர். இவர், நேற்று முன்தினம் திருக்கோவிலுார் - மணலுார்பேட்டை சாலை வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.பிள்ளையார் பாளையம், தனபால் என்பவரின் நிலத்தின் அருகில் சென்ற போது, எதிரில் வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், 38; ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் இறந்தார்.புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை