மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
கள்ளக்குறிச்சி : வெட்டிப்பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. சின்னசேலம் தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை மலர்கொடி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ராஜா, ராஜன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சிவகாமி வரவேற்றார். பல் மருத்துவர் இராவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிறப்பான முறையில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுக்கு பொன்னாடை, மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதில் சின்னசேலம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கருப்பன், கண்ணன், சின்னசாமி, ராமசாமி கலந்து கொண்டனர். சின்னசேலம் தமிழ்ச் சங்க தலைவர் கவிதைத்தம்பி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
05-Sep-2025